search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கேரள கோர்ட்டு"

    கனகதுர்காவை வீட்டில் அனுமதிக்க வேண்டும் என்று அவரது கணவர் கிருஷ்ணன் உண்ணிக்கு பஞ்சாயத்து உத்தரவிட்டுள்ளது. #Sabarimala #KanakaDurga
    திருவனந்தபுரம்:

    சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களும் சாமி தரிசனம் செய்யலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு பிறப்பித்தது.

    இதைத்தொடர்ந்து போலீஸ் பாதுகாப்புடன் கேரளாவை சேர்ந்த கனகதுர்கா, பிந்து ஆகிய 2 இளம்பெண்கள் சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர். இதை கண்டித்து கேரளாவில் ஐயப்ப பக்தர்கள் நடத்திய போராட்டம் கலவரமாக மாறியது.

    இதனால் கனகதுர்காவும், பிந்துவும் உயிருக்கு பயந்து போலீஸ் பாதுகாப்புடன் ரகசிய இடத்தில் வசிக்கும் நிலை ஏற்பட்டது. அதன்பிறகு நிலைமை சற்று சகஜமானதை தொடர்ந்து கனகதுர்கா கோழிக்கோட்டில் உள்ள தனது கணவர் வீட்டிற்கு சென்றார்.

    அப்போது கனகதுர்கா சபரிமலை ஆச்சாரத்தை மீறி சுவாமி ஐயப்பன் கோவிலுக்கு சென்றதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவரது மாமியார் அவரை தாக்கினார். இதில் காயம் அடைந்த கனகதுர்கா ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.

    அதன்பிறகு தன்னை கணவர் வீட்டில் வசிக்கவும், குழந்தைகளை பராமரிக்கவும் அனுமதிக்க வேண்டும் என்று கேட்டு கனகதுர்கா பெரிந்தல்மன்னா கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு புலாமந்தோல் கிராம கோர்ட்டுக்கு மாற்றப்பட்டது.

    நீதிபதி இந்த வழக்கை விசாரித்து கனகதுர்காவை வீட்டில் அனுமதிக்க வேண்டும் என்று அவரது கணவர் கிருஷ்ணன் உண்ணிக்கு உத்தரவிட்டார். குழந்தைகளை பராமரிப்பது பற்றி பிறகு உத்தரவு பிறப்பிக்கப்படும் என்றும் நீதிபதி கூறினார். மேலும் இந்த வழக்கு விசாரணையை வருகிற மார்ச் மாதம் 31-ந்தேதிக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டார்.

    இதற்கிடையில் கனகதுர்காவின் கணவர் கிருஷ்ணன் உண்ணி இந்த தீர்ப்பை எதிர்த்து கேரள ஐகோர்ட்டில் அப்பீல் செய்யப்போவதாக அறிவித்து உள்ளார். #Sabarimala #KanakaDurga
    ×